செய்திகள்

பட்ஜெட்டுக்கு ஆதரவளிக்க சுதந்திரக் கட்சி நிபந்தனை: தேசிய அரசாங்கத்தில் வெடிப்பு?

அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்திற்கும் நிதி அமைச்சருக்கும் தனியான யோசனையொன்றை வழங்கியுள்ளது. அவற்றை ஏற்றுக்கொண்டாலே வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதென சுதந்திரக் கட்சி நிபந்தனை விதித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பில் அடுத்த வாரம் பேச்சு நடைபெற உள்ளதாகவும் அறிய வருகின்றது.

இது தொடர்பில் பதில் அளித்த ஐ. ம.சு.மு செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நிதி அமைச்சருடனும் பிரதமருடனும் பேச்சு நடத்த இருக்கிறோம். அதன் பின்னரே சு.க வின் ஆதரவு குறித்து முடிவு செய்ய இருப்பதாக குறிப்பிட்டார்.

தனது தரப்பு வரவு செலவுத் திட்டத்திற்கு தனியான யோசனையொன்றை வழங்கியுள்ளதாக கூறிய அவர், அதிலுள்ள விடயங்களை நவம்பர் மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கும் வரவு செலவுத் திட்ட யோசனைகளில் உள்ளடக்குவது குறித்து அரசாங்கத்துடன் பேச இருப்பதாக குறிப்பிட்டார்.

மக்கள் மீது சுமையேற்றாத வகையிலும் தற்பொழுது அனுபவித்து வரும் சலுகைகளை நிறுத்தாத வகையிலும் புதிய வரவு செலவுத் திட்டம் அமைய வேண்டும். அதற்கேற்பவே எமது ஆதரவு குறித்து முடிவு செய்வோம் என்றார்.:06