செய்திகள்
ஆட்சி மாற்றத்திற்காக 2020 வரை காத்திருக்க தேவையில்லை : மகிந்தானந்த
தற்போது ஜனாதிபதிக்கும் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதன்படி விரைவில் ஆட்சி மாற்றமொன்று ஏற்படப் போவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்திலுள்ள உறுப்பினர்கள் எதிர்க்கட்சி , ஆளுங்கட்சிகளுக்கிடையே தாவுவதினூடாக அது நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி தமக்கு 2020 வரை ஆட்சி மாற்றத்திற்காக காத்திருக்க வேண்டியதில்லையென அவர் தெரிவித்துள்ளார். -(3)




