செய்திகள்
லசந்தவை தானே கொலை செய்ததாக கூறி இராணுவ புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர் தற்கொலை
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவை தானே கொலை செய்ததாக தெரிவித்து கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு இராணுவ புலனாய்வு பிரிவை சேந்த ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கேகாலை பகுதியை சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெரிய வேண்டியவர்கள் தெரிந்துக்கொள்வதற்காக என கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு தனது காற்சட்டை பையில் அந்த கடிதத்தை வைத்தவாறு அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)




