செய்திகள்

18ஆம் திகதி கூட்டு ஒப்பந்த இறுதி பேச்சுவார்த்தை : நிலுவை கொடுப்பனவு இன்றியே ஒப்பந்தம் கைச்சாத்தாகும்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்த இறுதி பேச்சுவார்த்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதுவரை 730 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கவே முதலாளிமார் சம்மேளனம் இனங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் வேலை நாட்கள் தொடர்பாக தொழிற் சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளத்திற்கும் இடையே சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் வருடத்திற்கு 300 நாள் வேலை வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே இ.தொ.கா இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடந்த 18 மாதங்களுக்கான இடைக்கால கொடுப்பனவை வழங்க முடியாது என முதலாளிமார் சம்மேளம் அறிவித்துள்ளதாகவும் நிலுவை கொடுப்பனவு இன்றியே கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தொழிற்சங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.-(3)