நிறுவனங்கள் சுயாதீனமானதாக இருந்தாலும் அதிகாரிகள் சுயாதீனமாக இல்லை : மகிந்த அமரவீர
ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணை நடத்தும் நிறுவனங்கள் சுயாதீனமானதாக இருந்தாலும் அவற்றுக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் சுயாதீனமாக செயற்படுவதில்லையென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதனால் குறித்த அதிகாரிகள் சுயாதீனமாக செயற்பட வேண்டுமெனவும் ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாமையினால் அரசாங்கத்திற்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த நிறுவனங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகின்றது போல் தெரிவதாக வெளியிட்டிருந்த கருத்து பல்வேறு விமர்சனங்களுக்கு இலக்காகியுள்ள நிலையிலேயே மகிந்த அமரவீர இந்த கருத்தை தெரிவித்துள்ளார். -(3)




