செய்திகள்

நுரைச்சோலையால் எதிர்வரும் நாளில் மின் வெட்டு அமுலாகலாம் : மின்சக்தி அமைச்சர்

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி செயற்பாடுகள் செயழிலந்துள்ளன. இதனால் எதிர்வரும் தினங்களில் நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என மின் சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மின் வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்படுமாகவிருந்தால் அது தொடர்பாக நாளை அறிவிக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த தொழிநுட்ப கோளாரை சீர் செய்வதற்கு 5 நாட்களாவது தேவைப்படுமெனவும் இதனால் மின் வெட்டு இடம்பெறலாம் எனவும் அவ்வாறு மின்வெட்டை அமுல்படுத்தும் நோக்கம் இருந்தால் அது தொடர்பாக நாளை அறிவிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாரை தொடர்ந்து வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நேற்று பல பிரதேசங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தன.-(3)