செய்திகள்

மகிந்தவுக்கு இராஜயோகம் ஆரம்பம் : பிரதமராகுவார் என்கிறார் வெல்கம

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு பீடித்திருந்த தோஷங்கள் கழிந்து தற்போது அவருக்கு இராஜயோகம் ஆரம்பித்துள்ளதாகவும் இதன்படி தமிழ் சிங்கள் புத்தாண்டுக்கு முன்னர் புதிய அரசாங்கம் அமையுமெனவும் அதில் மகிந்தவுக்கு உயர் பதவி கிடைக்குமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
மகிந்தவுக்கு இந்த மாதம் 15ஆம் திகதியிலிருந்து இராஜயோகம் ஆரம்பித்துள்ளதாகவும் இப்போது மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருப்பது தொடர்பாக தமக்கு பிரச்சினையில்லையெனவும் ஆனால் பிரதமர் பதவி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். அப்போதே முழுமையான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்க முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று புலத்சிங்கள பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)