சம்பளத்தை மேலும் அதிகரிக்க மாற்று வழியை தேடுகிறோம் : தொண்டமான்
தோட்டத் தொழிலாளர்களுக்கு 730 ரூபா சம்பள அதிகரிப்பு என்பது போதாது எனவும் இதனால் இதனை அதிகரிப்பது தொடர்பாக மாற்றுவழியை தேடிக்கொண்டிருப்பதாக இ.தொ.கா செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நேற்று தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தாங்கள் 1000 ரூபா கோரிக்கையையே முன்வைத்திருந்தோம். ஆனால் நீண்ட இழுபரிக்கு பின்னர் 730 ரூபாவுக்கே இணங்கியுள்ளனர். இது போதாது என எமக்கு தெரியும் இதனால் இதனை அதிகரிப்பதற்கு மாற்று வழியை கண்டுபிடிக்க வேண்டும். இதேவேளை கூட்டு ஒப்பந்தத்தில் தோட்டங்களை துப்பரவாக வைத்திருப்பதற்காக புதிய ஏற்பாடுகளை ஏற்படுத்தியுள்ளோம். அதன்படி தோட்டங்கள் துப்பரவாக இருந்தால் மட்டுமே தொழிலாளர்கள் அங்கு செல்வார்கள். என அவர் தெரிவித்துள்ளார். -(3)




