செய்திகள்

லண்டனில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் விக்னேஸ்வரன்

இங்கிலாந்துக்கு  விஜயம் மேற்கொண்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரன் நாளை மறுதினம்  ஞாயிற்றுக்கிழமை ரெய்னர்ஸ் லேனில் ஏற்பாடாகி உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை  கைச்சாத்தான  ‘இரட்டை நகர்’ உடன்படிக்கைக்கு   பின்னர் பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டுவரும் சி. வி விக்னேஸ்வரன், நாடு திரும்புவதற்கு முன்னர் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில்கலந்துரையாடும் வகையில்   இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டம் 440 Alexandra Ave, Harrow HA2 9TL என்ற முகவரியில் உள்ள Zoroastrian Centre இல்நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 8 மணி வரை நடைபெற இருக்கும் இந்த கூட்டத்துக்கான அனுமதி இலவசம் என்றும் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை கலந்துகொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

n10