செய்திகள்

சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படும் : ஜனாதிபதி

காடழித்தல், சட்டவிரோத மணல் அகழ்வு அடங்கலாக நாட்டில் இடம்பெறும் சுற்றாடல் அழிப்புக்கு காரணமானவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
திருகோணமலை மெக்கெய்ஸர் விளையாட்டரங்கில் இன்று (21) நடைபெற்ற சுற்றாடல் மாநாடு மற்றும் எவனரோபாஎ தேசிய மரநடுகை செயற்திட்டத்திட்ட தேசிய நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காடழித்தல், மண்வெட்டுதல், சட்டவிரோத மணல் அகழ்வு அடங்கலாக எமது நாட்டில் இடம்பெறும் சுற்றாடல் அழிப்பு தொடர்ந்தும் இடம்பெற்றால்இ அனைத்து மக்களும் பாரதூரமான சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்குமென்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அச் செயற்பாடுகளுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
29 வீதமாகவுள்ள நாட்டின் வனப்பரப்பை 32 வீதம் வரை உயர்த்துவது அரசாங்கத்தின் இலக்காகு மென்று அவர் குறிப்பிட்டார். இன்றைய தேசிய மரநடுகை தினத்தை முன்னிட்டு ஒரு பில்லியன் கிளிசீரியா மரங்களை நடும் தேசிய செயற்திட்டம் ஜனாதிபதியின் தலைமையில் திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கந்தளாய் வன பாதுகாப்புப் பிரதேசத்தில் கருங்காலி மரக்கன்றை நட்டு தேசிய மரநடுகை திட்டத்தை ஆரம்பித்ததுடன் பாடசாலைப் பிள்ளைகள், பொலீசார், முப்படையினர், சிவில் பாதுகாப்பு படையினர் போன்றோரின் பங்களிப்புடன் இரண்டு ஹெக்ரேயர் நிலப்பரப்பில் 2000 கன்றுகள் நடுகையும் ஆரம்பிக்கப்பட்து.
அதன் பின்னர் பாடசாலை மாணவ மாணவியருடன் உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் பற்றி கேட்டறிந்துகொண்டார். சுற்றாடல் பாதுகாப்புக்காக சிறப்பான பங்களிப்புச் செய்தவர்கள் ஜனாதிபதி அவர்களால் கௌரவிக்கப்பட்டனர். -(3)