செய்திகள்

ரஜினிக்கு பிறகு விஜய் தான் மாஸ்- எப்படி தெரியுமா?

விஜய்யின் பைரவா படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. ஒரே ஒரு பாடல் தவிர மற்ற படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துவிட்டது.

இந்நிலையில் இப்படத்தை வெளிநாடுகளில் SK Miles Media Group, B&B Ent, tentkotta ஆகியோர் நிறுவனங்கள் இணைந்து வெளியிட இருக்கிறது. இதுகுறித்து Sk MM தலைவர் சுரேஷ் வெங்கடாசாரி கூறுகையில், USAவில் பைரவா படத்தை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறோம். விஜய்க்கு இப்படம் பெரிய ஓப்பனிங் படமாக இருக்கும், அதோடு பாக்ஸ் ஆபிஸில் படம் பல சாதனைகள் புரியும் என்பதில் சந்தேகமில்லை என கூறியுள்ளார்.

ரஜினி தொடர்ந்து ஒரு பெரிய நடிகரின் படத்திற்கு இத்தனை வரவேற்பு இருக்கிறது என்றால் அது விஜய் படத்திற்கு தான் என்றும் தெரிவித்துள்ளார்.

US வசூலில் ஏற்கெனவே விஜய்யின் தெறி படம் மில்லியன் சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

N5