செய்திகள்

வடமாகாண முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு நீண்ட ஆயுள் வேண்டி வவுனியாவில் விசேட பிரார்த்தனை

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் 77வது பிறந்த தினம் இன்றாகும். அவருக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், ஆசி வேண்டியும் விசேட பூஜை வழிபாடு ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா, நாகர்இலுப்பைக்குளம் பொது மக்களின் ஏற்பாட்டில் இவ் விசேட பூஜை வழிபாடுகள் கந்தபுரம் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெற்றது.

இதன்போது வடமாகாண முதலமைச்சருக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், தமிழ் மக்கள் நலன்சார்ந்து அவர் முன்னெடுத்துள்ள அரசியல், பொருளாதார நகர்வுகளுக்கு ஆசிவேண்டியும் அவரது பெயரில் அர்ச்சனை செய்து விசேட வழிபாடுகள் இடம்பெற்றது. இதில் அப்பகுதி மக்கள் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

02 03 04 05 06 07 09

N5