யாழ் பல்கலை மாணவர்களின் உயிரிழப்பு தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த வேண்டும் : மகிந்த
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொலனறுவை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் யாழ் மாணவர்களின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் கொலையா , விபத்தா என அறிய வேண்டும். தெற்கிலும் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இதனால் குறித்த சம்பவத்தை நல்லிணக்கம் செத்துவிட்டதென கூற முடியாது என அவர் தெரிவித்துள்ளார் -(3)




