செய்திகள்

கோப் குழு கூட்டத்தில் குழப்பம் : தலைவர் ஹதுன்நெதி வெளிநடப்பு

மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இன்று (24) நடத்தப்பட்ட கோப் குழு கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
குறித்த கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்கனவு அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு புரம்பாக அந்த குழுவின் உறுப்பினர்கள் புதிய அறிக்கையொன்றை சமர்ப்பிக்க முயற்சித்த போதே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் குறித்த அறிக்கையை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து அந்தக் குழுவின் தலைவரான ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்நெதி அங்கிருந்து வெளியேறி சென்றுள்ளார்.
இந்த கூட்டத்தின் போது ஐக்கிய தேசிய கட்சியின் கோப் குழு உறுப்பினர்களே இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)