செய்திகள்

“ஆவா குழு”வின் பின்னணியில் செயற்படுவது யார்? பொதுமக்கள் மத்தியில் பலத்த சந்தேகம்!

சுன்னாகம் பகுதியில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துக்கு உரிமை கோரி ‘ஆவா குழு’ என்ற பெயரில் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ள போதிலும் அது தொடர்பில் பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள்.

குறிப்பிட்ட துண்டுப் பிரசுரம் ஓப்செட் முறையில் அச்சடிக்கப்பட்டிருப்பதுடன், யாழ்ப்பாணத்தில் பரவலாக பொதுமக்கள் மத்தியில் “இனந்தெரியாத” சிலரால் விநியோகிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குடாநாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாக இது உள்ளது.

அரசியல் அல்லது படையினரின் செல்வாக்கைப் பெற்றுக்கொள்ளாத குழு ஒன்றினால் இவ்வாறு ஓப் செட் முறையில் துண்டுப் பிரசுரங்களை அச்சடிக்கவோ பரவலாக விநியோகிக்கவோ முடியுமா என்ற கேள்வி பொமுக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.

திட்டமிட்ட முறையில் யாழ்ப்பாணத்தில் குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் சதி முயற்சி ஒன்றின் ஒரு பகுதியாக இது இருக்கலாம் எனவும் பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்திருக்கின்றது.

இரண்டு தினங்களுக்கு முன்னர் சுன்னாகம் பகுதியில் வைத்து இரண்டு பொலியார் வாள்வெட்டுக் காயங்களுக்கு உள்ளானமை தெரிந்ததே. காயமடைந்த பொலிஸார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்கள்.:06