செய்திகள்

வவுனியாவிலும் பூரண ஹர்த்தால்: இயல்பு நிலை பாதிப்பு

யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் பொலிசாரினால் சுட்டு படுகொலை செய்யப்பட்மையை கண்டித்தும் நீதி கோரியும் வடக்கின் இன்று பூரண ஹர்த்தால் இடம்பெறுகிறது.

இதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவிலும் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டு, போக்கவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டு பூரண ஹர்த்தால் இடம்பெறுகிறது. வவுனியாவில் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதுடன் தனியார் பேரூந்து போக்குவரத்து, அரச பேரூந்து சேவை, முச்சக்கர வண்டிச் சேவைகள் அனைத்தும் இடம்பெறாத நிலையில் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அரச திணைக்களங்கள், வங்கிகள் திறக்கப்பட்டுள்ள போதும் அவை வெறிச்சோடியே காணப்படுகின்றன. பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை. வவுனியா, பூந்தோட்டம் கல்வியற் கல்லூரி அருகில் வீதியில் ரயர் போட்டி எரிக்கப்பட்டு போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தப்பட்ட நிலையில் பொலிசார் விரைந்து சென்ற தீயை அணைந்து அவற்றை அகற்றினர்.

வவுனியாவில் இருந்து தெற்கு நோக்கிய போக்குவரத்துச் சேவை இடம்பெறுகிறது.

IMG_0664 IMG_0636 IMG_0643 IMG_0649 IMG_0661

N5