செய்திகள்

1983 ஆம் ஆண்டு நிலைமை மீண்டும் உருவாகின்றது: தினேஷ் குணவர்த்தன எச்சரிக்கை

1983 ம் ஆண்டில் இன்றுள்ளது போன்ற மோசமான பின்னணியிலே நாட்டின் பெரும் குழுப்ப நிலை உருவானது. அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியுள்ளதாக ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

23/2 நிலையியற் மன்றத்தில் கேள்வி எழுப்பிய போதே அவர் இது குறித்து கருத்து வெளியிட்டார். கொக்குவில், கல்பிட்டி, மட்டக்குளி சம்பவங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பிய அவர் மேலும் கூறியதாவது,

வடக்கில் யாழ்ப்பாணம், கல்பிட்டி, சுன்னாகம் மட்டக்குளி ஆகிய பிரதேசங்களில் ஆயுதம், வாள் என்பன பயன்படுத்தி கொலை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. சட்டம் ஒழுங்கை செயற்படுத்துவதில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது.:06