கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக தொழிற் திணைக்களத்தில் முறையிட தீர்மானம்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக தொழில் திணைக்களத்தில் முறைப்பாடு செய்வதற்கு மலையகம் சார் சிவில் அமைப்புகள் தீர்மானித்துள்ளன.
இது தொடர்பாக இன்று அந்த குழுவினர் கொழும்பிலுள்ள மித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சென்று கலந்துரையாடலொன்றை மேற்கொண்டு இது தொடர்பான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள போதும் தொழிற்சங்கங்கள் இன்னும் அந்த ஒப்பந்தத்தில் உள்ள விடயங்கள் தொடர்பாக தொழிலாளர்களுக்கு வெளியிடவில்லையெனவும் இது மனித உரிமை மீறலே எனவும் இதனால் இது தொடர்பாக தொழில் திணைக்களத்தில் முறையிடும் அதேவேளை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் கடிதம் எழுதவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் -(3)




