செய்திகள்

யாழ் மாணவர்களின் கொலையை கண்டித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து மலையகத்திலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.
இதன்படி லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது உயிரிழந்த மாணவர்களுக்காக அஞ்சலி நிகழ்வொன்றும் நடத்தப்பட்டுள்ளது.
சிவில் அமைப்பொன்றின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் அண்மையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90