அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூருக்கு பறந்தார்
பிணை முறி தொடர்பான சர்சையில் சிக்கியுள்ள மத்திய வங்கி முன்னாள் ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூருக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று பிற்பகல் 3.10 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக அங்கு பயணமானதாக தெரிவிக்கப்படுகின்று.
சர்சைகளுக்கு இலக்கான மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான கோப் குழுவின் அறிக்கை நாளைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையிலேயே அவர் இன்று சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.
சிங்கப்பூர் பிரஜையான இவர் புதிய அரசாங்கத்தில் மத்தியவங்கி ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)




