இந்த படம் ஓடவில்லை என்றால் நான் சினிமாவை விட்டு விலகிவிடுகிறேன் – மோகன்லால்
புலிமுருகன் படம் பிளாப் ஆனால் படங்கள் இயக்குவதை நிறுத்த முடிவு செய்ததாக இயக்குனர் வைஷாக் தெரிவித்துள்ளார். வைஷாக் இந்த முடிவை மோகன்லாலிடமும் கூறியுள்ளார்.
வைஷாகின் முடிவை கேட்ட மோகன்லால் கூறியதாவது, புலிமுருகன் நிச்சயம் ஹிட்டாகும். இல்லை என்றால் நான் இனிமேல் படங்களில் நடிக்க மாட்டேன் என்றார். மோகன்லாலின் முடிவை கேட்ட இயக்குனர் பேரதிர்ச்சி அடைந்தார். வேண்டாம் சார் அப்படி எல்லாம் பேசாதீர்கள், உங்களின் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கேட்டுள்ளார். இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் உள்ளேன்.
அப்படி இருந்தும் புலிமுருகன் பற்றிய என் கணிப்பு பொய்யாகிவிட்டால் நான் நடிக்க தகுதியற்றவன் என்று மோகன்லால் தெரிவித்துள்ளார், எண்ணியது போல் அவர் போட்ட கணக்கு வீண் போகவில்லை, படம் வெளியாகி பட்டதொட்டி எங்கும் வெற்றிநடைபோடுகிறது. மோகன்லால் நடிப்பு வரலாற்றிலே புலி முருகன் ஒரு மைல் கல் என்று சொல்கிறார்கள்.
N5




