நெடுங்கேணி அடர்ந்த காட்டுக்குள் விடுதலைப் புலிகளின் குறியீட்டு தகடுகள்
வவுனியா மாவட்ட நெடுங்கேணி அடர்ந்த காட்டு பிரதேசங்களில் விடுதலைப் புலிகளின் கள நிலையை அடையாளப்படுத்தும் குறியீட்டு தகடுகள் தற்பொழுதும் காணப்படுகின்றன.
குறித்த பிரதேசங்கள் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் ஒருவரான கேணல் குமரன் 2009 ஆம் ஆண்டு முதலாம் மாதம் வரை கவலரண்களை அமைத்து களத்தில் ஈடுபட்டிருந்தார்.
பின்னர் மன்னார் நாச்சிகுடா, வெள்ளாங்குளம், மல்லாவி ஊடாக இராணுவத்தினர் மாங்குளத்தை கைப்பற்றியவுடன் குறித்த பிரதேசத்தில் நிலை கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் களநிலைகள் மாறியது.
குறித்த களத்தின் பாதுகாப்புடன் கடந்த 2007 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 22 ஆம் திகதி அனுராதபுரம் விமான நிலையத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியபோது, அனுராதபுரம் விமான நிலையம், வவுனிய யோசப் இராணுவ முகாம் உள்ளிட்ட முக்கிய இராணுவ முகாங்களில் விடுதலைப் புலிகளின் ஆட்லரிப்பிரிவு தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
N5




