செய்திகள்

பால் மா விலைகளை 100 ரூபாவால் அதிகரிக்க திட்டம்

இறக்குமதி செய்யப்படும் பால் மா வகைகளின் விலைகளை 100 ரூபாவினால் அதிகரிப்பதற்கு பால் மா இறக்குமதியாளர்கள் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய வற் வரி அதிகரிப்பின் பிரகாரம் பால் மாவுக்கான வற் வரியும் அறவிடப்படவுள்ளமையினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் இது தொடர்பாக இந்த வாரத்தில் பால் மா இறக்குமதியாளர்கள் நிதி அமைச்சருடன் கலந்துரையாடலொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)