வீதிகளில் கைவிடப்படும் பெற்றோரின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் : சமூக சேவைகள் அமைச்சர்
வீதிகளில் கைவிடப்படும் பெற்றோர்களின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டுமென சமுக சேவைகள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் நேற்று நடைபெற்ற மாகாண சமூக சேவைகள் அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சில பிள்ளைகளால் தமது வயோதிப பெற்றோர்கள் வீதிகளில் கைவிடப்படுகின்றனர். இவர்கள் வயோதிப இல்லங்களில் அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வேளையில் அவர்கள் உயிரிழந்த பின்னர் அவர்களின் உறவினர்கள் அந்த பெற்றோரின் சொத்துக்களுக்கு உரிமை கோரி வரும் போது சமூக சேவைகள் திணைக்களம் பல்வேறு பிரச்சினைகளுக்கு இலக்காகின்றது. இதனால் வீதிகளில் பிள்ளைகளால் கைவிடப்படும் பெற்றோர்களின் சொத்துக்களை அரசுடமையாக்கும் வகையிலான புதிய சட்டமொன்றை அமைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். -(3)




