ஜனாதிபதி மைத்திரி இன்று யாழ் விஜயம்
கீரிமலை பிரதேசத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகள் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த தெல்லிப்பழை பிரதேசத்திற்கு உட்பட்ட 454 ஏக்கர் காணி மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் இன்று கையளிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
முப்படைகளின் பங்களிப்புடன் 100 வீடுகள் கீரிமலை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் இருப்பவர்களுக்காக இந்த வீடுகள் அமைக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம. சுவாமிநாதன் தெரிவித்தார்.
பலாலி ராணுவ முகாமை அண்டிய பகுதியில் 1927 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிருப்பதாக பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார். இதுவரை வடக்கில் 7185 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். -(3)




