செய்திகள்

”ஆவா”வை தேடி வடக்கில் 9 பொலிஸ் குழுக்கள்

வடக்கில் ஆவா குழு உள்ளிட்ட சட்ட விரோத செயல்களின் ஈடுபடும் குழுக்களை கண்டு பிடிப்பதற்காக குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினால் 9 பொலிஸ் குழுக்கள் அங்கு தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் , சுன்னாகம் , மானிப்பாய் , கோப்பாய் போன்ற இடங்களில் குறித்த சட்ட விரோத குழுக்கள் தலைதூக்கியுள்ளதாகவும் அவர்களால் நாளாந்தம் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில் அவர்களை தேடி தற்போது அந்தப் பகுதியில் விசேட தேடுதல்கள் நடத்தபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது -(3)