ரணில் , மகேந்திரனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி முறைப்பாடு
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 11 எம்.பிக்கள் இன்று காலை கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு சென்று இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.
மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி விவகாரம் தொடர்பாக இவர்கள் இருவர் தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டுமென கோரியே இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. -(3)




