செய்திகள்

ஜனாதிபதியின் யாழ் விஜயம் : படங்கள்

காங்கேசன்துறை, கீரிமலை, நல்லிணக்கபுரம் கிராமத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மக்களிடம் கையளித்தார்.
அகதிகளாகி யாழ்ப்பாணத்தில் 31 நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த 971 குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் 100 வீடுகளைக்கொண்ட இந்தத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளை அந்த மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இதில் அமைச்சர் டி எம் சுவாமிநாதன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன், மாவை சேனாதிராஜா ஆகியோரும் முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். -(3)05 10 07 04 74