கோப் பரிந்துரைகளை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி விசாரிக்க அமைச்சரவையில் தீர்மானம்
மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பான கோப் குழுவின் பரிந்துரையை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று பயாகல பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அமைச்சரவை பேச்சாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.
கோப் குழுவின் பரிந்துரை தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அந்த பரிந்துரையை சபாநாயகர் ஊடாக சட்டமா அதிபருக்கும் அனுப்பவும் மற்றும் அரச நிதி திணைக்களத்தினூடாக விசாரணை நடத்தும் வகையில் யோசனைகள் முன்வைக்கபட்டுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார். –(3)




