மீட்கப்பட்ட ஐஎஸ் நகரத்தில்
சிஎன்என்
சிறு சலூன் ஓன்றை சிறுவர்கள் மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் வெளியே எட்டிப்பார்க்கின்றனர். நபர் ஓருவர் தனது தாடியை வழித்துக்கொண்டிருக்கின்றார்- அவர்களிற்கு அது மிகவும் புதியவிடயம்.
சவரம்செய்துகொண்டிருக்கும் நபரிற்கும் அது புதிய விடயம். கடந்த இரண்டுவருடங்களாக சவரம்செய்துகொளவதற்காக தன்னிடம் யாரும் வருவதில்லை,என்கிறார் அவர்.தான் எவ்வாறு தலைமுடிவெட்டவேண்டும் என்பது குறித்து ஐஎஸ் அமைப்பினர் நிபந்தனைகளை விதித்திருந்தனர், அவர்கள் இந்த கிராமத்தை கைப்பற்றியவேளை சவரம் செய்வதை தடைசெய்து விட்டது என அவர் தெரிவிக்கின்றார்.
அது பஸ்லியா நகரம்,மொசூலிற்கு வடக்காக 20 கிலோமீற்றர் தொலைவில் காணப்படுகின்றது,இந்த நகரிலிருந்து ஐந்துகிலோமீற்றரில் ஐஎஸ் நிலைகள் காணப்படுகின்றன.
ஐந்து நாட்களிற்கு முன்னரே குர்திஸ்படையணிகள் இந்த நகரை கைப்பற்றின, ஐஎஸ் அமைப்பு இங்கிருந்து பின்வாங்கியது.
இதன் பின்னர் 200ற்கும் மேற்பட்டவர்கள் தன்னிடம் முடி வெட்டிக்கொள்வதற்காக வந்துள்ளனர் என்கிறார் அகமட். அந்த பயங்கரம் முடிவிற்கு வந்துள்ளமை குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளோம் அதனை கொண்டாடுகின்றோம் என்கிறார் அவர்.
இங்கு பலர் தற்போது தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொள்ள தலைமுடியை வெட்டிக்கொள்கின்றனர். ஐஎஸ் கட்டுப்பாட்டின் கீழ் வாழ்ந்தவேளை பிழையான தலைமுடிவெட்டிற்காக ஓருமாத காலம் சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டிய நிலை காணப்பட்டது. 
இன்றும் சற்று தொலைவில் இன்னொரு நபர் சிகாட் என்பவரின் தாடியை அழகுபடுத்திக்கொண்டிருப்பதை பார்க்க முடிகின்றது. தனது பெயரை தெரிவிக்க விரும்பாத அவர் ஐஎஸ் ஆட்சியின்போது அவர்களின் அனுமதியின்றி எதனையும் செய்யமுடியவில்லை, என்கிறார்.
அந்த நகரின் கடைகளில் சிகரெட் வியாபாரம் மீண்டும் சூடுபிடிப்பதை காணமுடிகின்றது. இதுவரை காணமுடியாமலிருந்து தீயபழக்கங்கள் எல்லாவற்றையும் பகிரங்கமாக காணமுடிகின்றது. ஐஎஸ் காணத்தில் சிகரெட் பிடிப்பது தடைசெய்யப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது அந்த நகரத்தில் சிகரெட் பிடிப்பது சுதந்திரத்தின் குறியீடாக காணப்படுகின்றது.




