ஆவா குழுவின் பின்னணியில் கோதாபய : அம்பலப்படுத்தினார் ராஜித
ஆவா குழுவின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்பு செயலளரும் மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிலரும் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த அரசாங்க காலத்தில் வடக்கில் இவர்களால் ஆவா குழு உருவாக்கப்பட்டதாகவும் அந்தக் குழு அப்போதிருந்த பாதுகாப்பு செயலாளரின் அனுமதியுடன் இராணுவ அதிகாரியொருவரினால் விடுதலைப்புலிகளுக்கு எதிரான செயற்பாடுகள் மற்றும் இராணுவத்தினருக்கு எதிரானவர்கள் மீது தாக்குதல் நடத்தல் உள்ளிட்ட விடயங்களுக்காக உருவாக்கப்பட்டதெனவும் அந்தக் குழுவே இப்போதும் செயற்படுகின்றதென தாம் நம்புவதாகவும் இன்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த குழுவினரை ஒழிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)




