செய்திகள்

”ஆவா”வுக்கும் தனக்கும் தொடர்பில்லை : தன் மீதான குற்றச்சாட்டை நிராகரிக்கும் கோதாபய

ஆவா குழுவுடன் தன்னை தொடர்புபடுத்தி அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்த கருத்தை முற்றாக நிரகரிப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
ஆவா குழுவை கோதாபயவே உருவாக்கியதாக நேற்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது ராஜித சேனாரட்ன கருத்து வெளியிட்டிருந்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கோதாபய ராஜபக்‌ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சராக இருந்தால் அவருக்கு உரிய பணிகளை செய்ய வேண்டும். இதனை விடுத்து மற்றையவர்கள் மீது போலிக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது என கோதாபய தெரிவித்துள்ளார். -(3)