யுத்தத்தின் பின் வடக்கில் கலாச்சார சீரழிவுகள் அதிகரித்துள்ளன : ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி
வடக்கில் யுத்தத்தின் பின்னர் பல்வேறு போதைப் பொருள் பாவனை உள்ளிட்ட பல்வேறு கலாச்சார சீரழிவுகள் அதிகரித்துள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இராஜங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய இராஜங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கில் சிறந்த கலாச்சாரம் மற்றும் கௌரவமான வாழ்க்கை முறை காணப்பட்டது. ஆனால் யுத்தத்தின் பின்னர் போதைப் பொருள் பாவனை , மதுபாவனை மற்றும் வெளிநாட்டு பண பயன்பாடு என்பன அதிகரித்து அந்த காலாச்சரம் பாதிக்கப்பட்டுள்ளது. மது விற்பனையில் வடக்கு கிழக்கு மாகாணங்களே முன்னிலையிலும் இருக்கின்றது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)




