நான் தவறெதுவும் செய்யவில்லை : அர்ஜுன மகேந்திரன்
நான் தவறு செய்யவும் இல்லை வெளிநாட்டுக்கு தப்பிப் போக வேண்டுமென்ற எண்ணமும் கிடையாது என முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று நாடு திரும்பிய அவரிடம் விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களினால் மத்திய வங்கி பிணை முறி தொடர்பான கோப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
”நான் நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வொன்றிற்கே வெளிநாட்டுக்கு சென்றிருந்தேன். வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் நோக்கம் கிடையாது. நான் குற்றமெதுவும் செய்யவில்லை. கோப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. பார்ப்போம்” . என அவர் தெரிவித்துள்ளார்.




