செய்திகள்

அரை நாள் சம்பளம் வழங்குவதற்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்

அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில் தொழிலாளர்கள நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தோட்ட நிர்வாகம் தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்திற்கு அரை நாள் சம்பள வீதம் வழங்கியுள்ளது. கடந்த காலங்களில் 18 கிலோவிற்கு குறைவாக கொழுந்து பறித்த போது முழு நாள் சம்பவம் வழங்கியதாகவும், கூட்டு ஒப்பந்தம் முடிந்த பின்பு குறைந்த கிலோ கொழுந்து பறிக்கும் போது முழு நாள் சம்பளம் வழங்க முடியாது எனவும் நிர்வாகம் அறிவித்ததையடுத்து தொழிலாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத்தில் உள்ள கொழுந்து மடுவத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதேவேளை கடந்த காலங்களில் ஒவ்வொரு நாளும் 4.30 மணியளவில் தங்களின் தொழிலை முடித்து வீடு திரும்பியதாகவும், தற்போது 5 மணி வரை கட்டாயம் தொழில் செய்ய வேண்டும் என தோட்ட நிர்வாகம் வழியுறுத்துவதாகவும், தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட போதிலும் இதுவரை சம்மந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தமக்கு விளக்கமளிக்கவில்லை என்றும் இவர்கள் தெரிவித்தனர். -(3)