செய்திகள்

கொழும்பில் இன்று இரவு முதல் நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை இரவு 9 மணி முதல் நாளை காலை 5 வரையில் நீர்விநியோக தடை அமுலில் இருக்கும் என்று தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதன்படி பேஸ்லைன் வீதி, களனி பாலப்பகுதி, தெமட்டக்கொட, கொழும்பு 9, கொழும்பு 13, கொழும்பு 14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பிரதேசங்களில் இந்த நீர்விநியோகத்தடை அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. -(3)