கதாநாயகனாக மாறிய விஷ்ணு
100 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தினை தயாரித்து, நடித்த விஷ்ணு தற்போது மீண்டும் தயாரித்து நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் படத்தின் டைட்டில் ‘கதாநாயகன்’ என விஷ்ணு அறிவித்துள்ளார். இந்த படத்தினை முருகானந்தம் இயக்கவுள்ளதாகவும், விஷ்ணுவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா ஜோடியாக நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படம் உட்பட பல படத்தில் காமெடியில் கலக்கிய சூரியும் இந்த படத்தில் உள்ளதாகவும், இதற்கு சீன்ரோல்டான் இசையமைக்கவுள்ளதாகவும், படப்பிடிப்புகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதே டைட்டிலில் 1988 ம் ஆண்டு பாண்டியராஜன், எஸ்.வி.சேகர் நடித்த படம் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




