செய்திகள்

மழை குறையும் : மண்சரிவு அபாயம் தொடர்கிறது

நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் நாட்களில் குறைவடையுமென வளிமண்டலவியல் திணகக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு மற்றும் கற்பாறை உடைந்து விழுதல் அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
மாத்றை, காலி, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மழையுடன் கூடிய காலநிலை நீடிக்குமானால் குறிப்பிட்ட மாவட்டங்களில் அனர்த்த நிலைமை மேலும் தீவிரமடையும் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. -(3)