செய்திகள்

இராணுவத்தினர் மீதான பொலிஸாரின் தாக்குதலுக்கு ஜே.வி.பி கண்டனம்

கொழும்பில் இன்று முன்னாள் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட ஆரப்பாட்டம் மீது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர் புகை மற்றும் நீர் தாக்குதலுக்கு ஜே.வி.பி கண்டனம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்தக் கட்சியினால் விடுக்கப்பட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அங்கவீனமுற்ற இராணுவத்தினர் தமது ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு பல நாட்களாக போராடி அரசாங்கம் தீர்வு தராத நிலையிலேயே அவர்கள் இன்று ஜனாதிபதி செயலகம் நோக்கி வந்துள்ளனர். இவ்வாறு வந்தவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணாது அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு மற்றும் நீர் தாக்குதல்கள் நடத்தப்பட்டமையானது மிகவும் கவலைக்குறியதாகும். அங்கவீனமில்லாவர்களுக்கு இவ்வாறான தாக்குதலுக்கு முகம்கொடுக்க முடியாது என்ற நிலையில் கை , கால்கள் மற்றும் கண்களை இழந்த இவ்வாறான இராணுவத்தினர் மீது இவ்வாறு தாக்குதல் நடத்துவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)