அங்கவீனமுற்ற இராணுவத்தினரின் போராட்டம் முடிவுக்கு வந்தது
தமது ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பான பிர்ச்சினைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி அங்கவீனமடைந்த முன்னாள் இராணுவத்தினரின் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
12 வருடங்கள் சேவைக்காலத்தை பூர்த்தி செய்யாத இராணுவத்தினருக்கும் ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதாக அரசாங்கம் உறுதியளித்ததை தொடர்ந்து அவர்களின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
கடந்த திங்கட் கிழமை முதல் போராட்டத்தை ஆரம்பித்திருந்த முன்னாள் இராணுவத்தினர் இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)




