வவுனியாவில் இருந்து யாழ் கொண்டு செல்லப்படும் அரிசியில் அதிகலாபம் ஈட்ட முயலும் யாழ் வர்த்தகர்கள்
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படும் அரிசியில் யாழ் வர்த்தகர்கள் அதிகலாபம் ஈட்ட முயல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியாவில் உள்ள அரிசி ஆலைகளில் கொள்வனவு செய்யப்படும் அரிசிகளில் கிலோ ஒன்றுக்கு 15 தொடக்கம் 20ரூபாய் வரை இலாபம் வைத்தே அவை விற்பனை செய்யப்படுவதாக வவுனியா அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அரிசி கொண்டு செல்லப்படுகின்ற போது கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் 50 சதம் போக்குவரத்து செலவு ஏற்படுகிறது. அதன் பின் விற்கப்படுகின்ற அதிகரித்த விலையானது மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கான இலாபமே. அந்தவகையில் வவுனியாவில் சிவப்பு ஆட்டக்காரி அரிசி ஒரு கிலோ 82 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட யாழ்ப்பாணத்தில் அது 90 ரூபாய் தொடக்கம் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சம்பா வவுனியாவில் 78 ரூபாய்க்கும் யாழில் 90 ரூபாய்க்கும், சிவப்பு பச்சை வவுனியாவில் 70 ரூபாய்க்கும் யாழில் 85 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அந்தவகையில் யாழில் தற்போது அதிகரித்து காணப்படும் அரிசி விலையேற்றம் வவுனியா அரிசி ஆலை வியாபாரிகளால் ஏற்பட்டது அல்ல எனவும் தாம் விற்பனை செய்யும் அரிசிகளை மொத்த வியாரிகளிடம் கொள்வனவு செய்யும் யாழ் சில்லறை வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட முயல்வதே அதற்கு காரணம் எனவும் ஆனால் அவர்கள் வவுனியாவில் அரிசி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறியே வாடிக்கையாளருக்கு விற்பனை செய்து வருகின்றனர் எனவும் வவுனியா அரிசி ஆலை உரிமையாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
N5




