செய்திகள்

சர்வதேச மோதல்களை எதிர்கொள்ளவுள்ள அமெரிக்காவின் புதியஜனாதிபதி

இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் சர்வதேசசமூகத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க தேர்தல் இதுவாகத்தான் இருக்க முடியும்.

ஓருவேட்பாளர் தனது முன்னைய ஜனாதிபதியின் நடவடிக்கைகளை தொடரப்போவதாக தெரிவித்துள்ளார்,தற்போதைய தாராளவாத உலக ஓழுங்கை பேணிப்பாதுகாப்பதற்காக நடவடிக்கை  எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

மற்றைய வேட்பாளர் தற்போதைய உலக ஓழுங்கை மாற்றியமைக்கப்போகின்றேன் என  வாக்குறுதியளித்துள்ளார். தற்போது காணப்படும்  கூட்டணிகளிற்கும், உலக பொருளாதார ஓப்பந்தங்களிற்கும் முற்றுப்புள்ளி வைப்பேன் என  தெரிவிக்கும் அவர் உலகின் ஏதேச்சதிகார-சர்வாதிகார  அரசாங்களுடன் நட்புறவை பேணுவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெறும் பட்சத்தில் அது வோசிங்டனில் அரசியல் நெருக்கடிகளை உருவாக்கலாம்.

A captured Islamic State tank and shells are seen at the Iraqi army base in Qaraqosh, east of Mosul, Iraq. REUTERS/Zohra Bensemra

டிரம்ப் தான் தேர்தல் பிரச்சாரங்களின் போது தெரிவித்த ஆபத்தான விடயங்களை நடைமுறைப்படுத்துவாரா என்பதே இராஜாதந்திர வட்டாரங்கள் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களின் கேள்வியாக உள்ளது.

டிரம்ப் தேர்தல்பிரச்சாரத்தின்போது தான் பின்பற்றி கடுமையான நிலைப்பாடுகளை தளர்த்துவார், குடியரசுக்கட்சியின் பாரம்பரிய கொள்கைகளை பின்பற்றுவார் என்ற எதிர்பார்ப்பு சிலரிடம் காணப்படுகின்றது-

ஆனால் இம்முறை அப்படி நடக்காது டிரம்ப் தான் வாக்குறுதியளித்த விடயங்களில் பின்வாங்கமாட்டார் என்கிறார் வோசிங்டனின் புருக்ளின் நிருவகத்தை சேர்ந்த ஆய்வாளர் தோமஸ் ரைட்.

நாங்கள் நினைப்பதை விட அவர் அதிகளவு கொள்கைப்பிடிப்புடன் காணப்படுகின்றார், சில விடயங்களில் அவர் தொடர்ச்சியான நிலைப்பாடுகளை பின்பற்றுகின்றார் என சுட்டிக்காட்டுகின்றார் அந்த ஆய்வாளர்.

டிரம்ப் அமெரிக்காவின் கூட்டணிகளை  எதிர்க்கின்றார்,அமெரிக்கா தற்போது செய்துகொண்டுள்ள பாதுகாப்பு ஓப்பந்தங்களை அவர் இரத்துச்செய்வார்,அவர் ரஸ்யா சார்பானவர், சர்வாதிகாரிகள் சார்பானவர் என அந்த ஆய்வாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

டிரம்ப் ஜனாதிபதியானால் , தேர்தல் பிரச்சாரங்களில் தெரிவித்த விடயங்களை நடைமுறைப்படுத்த முயலும்போது அமெரிக்காவின் பல இராஜதந்திரிகளும் இராணுவ அதிகாரிகளும் அதனை ஏற்க மறுத்து தங்கள் பதவியை இராஜினாமா செய்வார்கள் என்ற கருத்தும் காணப்படுகின்றது.

அதேவேளை ஹிலாரி வெற்றிபெற்றால் அவர்  ஓபாமாவின் வெளிவிவகாரகொள்கையிலிருந்து தனது வெளிவிவகார கொள்கையை எவ்வாறு மாற்றியமைப்பது என்ற சிக்கலை எதிர்கொள்வார்.ஏனெனில் இருவரின் வெளிவிவகார கொள்கைகளிற்கும் வித்தியாசம் இல்லை, ஓபாமாவின் வெளிவிவகார கொள்கையின் தொடர்ச்சியே ஹிலாரியின் கொள்கைகள்.

வடகொரியா

Donald Trump attends a campaign rally in Detroit. REUTERS/Carlo Allegri

Donald Trump attends a campaign rally in Detroit.
REUTERS/Carlo Allegri

அமெரிக்காவின் செல்வாக்கும் வலிமையும் உலகில் மிகவேகமாக சவாலிற்குள்ளாகி வருகின்றது. கொரிய தீபகற்பத்திலேயே இதனை அதிகம் காணமுடிகின்றது.வடகொரிய தலைவர் தொடர்ச்சியாக பல ஏவுகணை பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளார்.

அடுத்த சில வருடங்களில் அந்தநாடு அமெரிக்காவின்மேற்கு கரையை அடையக்கூடிய ஏவுகணையை உருவாக்கும் என்ற அச்சம் காணப்படுகின்றது.

முன்னைய அமெரிக்க அரசாங்கங்கள் தேவைப்பட்டால் படைபலத்தை பயன்படுத்தி வடகொரியாவை கட்டுப்படுத்தவேண்டும் என்ற கொள்கையை கொண்டிருந்தன.

எனினும் இந்தவிடயத்தில் முக்கியமுடிவை எடுக்கப்போவது புதிய ஜனாதிபதியே.

ஹிலாரி ஜனாதிபதியானால் அவர் உடனடியாக இந்த விடயத்தில் கவனம் செலுத்துவார்,தென்கொரியா மற்றும் ஜப்பானிற்கு அமெரிக்கா அவர்களை கைவிடாது என்ற வாக்குறுதியை வழங்குவார்,ஐக்கியநாடுகளின் தடையை தீவிரமாக அமுல்படுத்துவதற்கான அழுத்தங்களை சீனாவிற்கு கொடுப்பார் என ஹிலாரியின் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தந்திரோபாயம் வெற்றியளிக்காது,அதனால் அவர் வடகொரியாவுடன் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்,வடகொரியாவின் அணுவாயுத நாடு என்ற அந்தஸ்த்தை ஏற்கவேண்டிய நிலை உருவாகலாம். அவ்;வாறான நிலை உருவானால் கொரிய வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நண்பர்கள் அச்சமடையலாம்.

அதேவேளை டிரம்ப் ஜப்பான்,தென்கொரிய போன்ற நாடுகள் தங்கள் அணுவாயுதங்களை தாங்களே உருவாக்கவேண்டும் என தெரிவித்துள்ளார் இதனால் பிராந்தியத்தில் அணுவாயுதபோட்டி உருவாகலாம்.

வடகொரியாவை கட்டுப்படுத்துமாறு சீனாவை கேட்பேன், தேவைப்பட்டால் வடகொரிய தலைவரையும் சந்திப்பேன், அந்த முயற்சிகள் வெற்றியளிக்காவிட்டால் அமெரிக்கா தனது அணுவாயுதங்களை வடகொரியாவிற்கு எதிராக பயன்படுத்தும் என்கிறார் டிரம்ப்

அணுவாயுதங்களை  பயன்படுத்தாவிட்டால் எதற்காக அவற்றை தயாரிக்கவேண்டும் என்பது டிரம்பின் வாதம்

சிரியா

சிரியாவிலும், ஈராக்கிலும் ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான யுத்தத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ள தருணத்தில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை மக்கள் தெரிவுசெய்துள்ளனர்.

ஆனால் சிரியா ஜனாதிபதி அசாத்திற்கு எதிரான அமெரிக்காவின் ஆதரவுடனான எதிர்தரப்பினரின் யுத்தத்தில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

தேர்தல் பிரச்சாரங்களின் போது சிரியாவின் மீது விமானங்கள் பறப்பதை தடைசெய்யும் வலயத்தை ஏற்படுத்தப்போவதாக ஹிலாரி தெரிவித்துள்ளார்,ரஸ்யாவுடன் நேரடி மோதலை ஏற்படுத்தக்கூடிய விடயம் இது.

மேலும் ஹிலாரி ஜனாதிபதியானால் சிரியா கிளர்ச்சிக்காரர்களிற்கு நேரடியாக வெளிப்படையாக ஆயுதங்களை வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

டிரம்ப் தான் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக சிரியா மற்றும் ரஸ்யாவுடன் இணைந்து பாடுபடுவேன் என தெரிவித்துள்ளார். அலெப்போவின் மீதான குண்டுவீச்சினை அவர் இதுவரை கண்டிக்கவில்லை.

டிரம்பின் இந்த கொள்கைகள் பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம்,சிரியாவின் எதிர்கட்சிகளும் வளைகுடா நாடுகளும்  அமெரிக்கா தங்களிற்கு துரோகமிழைத்துவிட்டது என கருதலாம்.

ரஸ்யா

அமெரிக்க ஜனாதிபதிதேர்தலில் டிரம்பின் சார்பில் தலையிடுவதற்கு ரஸ்யா சதிநடவடிக்கைகளில் ஈடுபட்டது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதால் ஹிலாரி ஜனாதிபதியானால்  ரஸ்யாவிற்கு எதிரான கடுமையான கொள்கைiயை பின்பற்றுவார்.

டிரம்ப் இதற்கு எதிர்மாறான கொள்கையை பின்பற்றுவார்,உக்ரைன் மீதான ரஸ்யாவின் நடவடிக்கைகளை அவர் எதிர்க்கமாட்டார்.