விக்னேஸ்வரன் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது : ஆளுனர் ரெஜினோல்ட் குரே
வடக்கிலுள்ள பிரச்சினைக்ளை தீர்ப்பதற்காக சர்வதேசத்தின் தலையீடு அவசியமானது என வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறுவது அரசியல் லாபத்தை அடிப்படையாக கொண்டது எனவும் அவர் கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
பீ.பீ.சி சேவைக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே ஆளுனர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடக்கில் அண்மையில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அங்கு நிர்வாகம் சீர்குலைந்துள்ளது என கூற முடியாது எனவும் ஆனால் விக்னேஸ்வரனோ சர்வதேச பிரதிநிதிகளிடம் வடக்கில் நிர்வாகம் சீர்குலைந்துள்ளதாக கூறுவதாகவும் இது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்லவெனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)




