செய்திகள்

ட்ரம்ப் உலக நாடுகள் விடயத்தில் தலையிடாமல் இருப்பதே சிறந்தது : அமைச்சர் ராஜித

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலக நாடுகளின் விடயங்களில் தலையிடாது தனது நாட்டில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து செயல்படுவாராயின் அதுவே போதுமானதாகும் என்று சுகாரதா போஷாக்கு மற்றும் சுதேஷிய வைத்தியத்துறை அமைச்சர் மற்றும் அமைச்சரவை பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பின் வெற்றி தொடர்பாக இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இந்த செய்தியாளர் மாநாடு அரசதகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இந்த மகாநாட்டில் செய்தியாளர் ஒருவர் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி ட்ரம்ப் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்
இவர் கூறும் கொள்கையை செயல்படுத்தினால் சிறந்தது. ரஷ்ய ஜனாதிபதி பூட்டின் கூறுவது சரி என்று இவர் கூறுகின்றார். ட்ரம்பின் செயற்பாடுகள் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு சிறந்ததாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில்
டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெறுவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருந்தது முன்னர் பராக் ஒபாமா வெற்றி தொடர்பிலும் நான் நம்பிக்கை கொண்டிருந்தேன். ட்ரம்ப் எம்மைப்போலவே கொடிகட்டி வீதிகளில் பதாதைகளைப் போட்டு தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டவர் ஆவார்.
சாதாரண மக்களின் செல்வாக்கைப்பெற்று வெற்றிபெற்றார். உலகநாடுகளின் விடயங்களில் தலையிடாது தமது நாட்டில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து அமெரிக்கா தொடர்பில் கவனம் செலுத்தினால் சிறந்தது என்று தெரிவித்துள்ளார். -(3)