செய்திகள்

களனியில் 45 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு

களனி பிரதேசத்தில் 45 கோடி ரூபா பெறுமதியான 31 கிலோ கிராம் ஹெரொயின் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
களனி பெதியாகொடவில் அமைந்துள்ள களஞ்சியசாலையொன்றில் இருந்தே இந்த ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனி கொள்கலன் ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். -(3)