அச்சத்தில் அமெரிக்காவின் சகாக்கள்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக குடியரசுக்கட்சியின் சர்ச்சைக்குரிய வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறித்து உலகநாடுகளின் பல அரசாங்கங்கள் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளன என ரொய்ட்டர்ஸ் செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது
ஆசியா ஐரோப்பா உட்பட பல நாடுகளின் முக்கிய அமைச்சர்கள் டொனால்ட் டிரம்ப் தெரிவுசெய்யப்பட்டமை குறித்து மிகுந்த ஆச்சர்யமும் அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க தேர்தல்முடிவை பெரும் அதிர்ச்சி என வர்ணித்துள்ள ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் உர்சுலா வொன் டெய்ர் லெய்ன் இரண்டாம் உலகயுத்தத்திற்கு பின்னர் அமெரிக்காவினால் மேற்பார்வை செய்யப்பட்டு வந்த உலக சமாதானம் இத்துடன் முடிவிற்கு வந்துவிடுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
டிரம்புடன் இணைந்து செயற்பட தயார் என தெரிவித்துள்ள பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் ஜீன் மார்க் அரல்ட் எனினும் டிரம்பின் குணாதிசயங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளதுடன் உலகின் முக்கிய விடயங்கள் தொடர்பில் டிரம்பின் வெளிவிவகார கொள்கை எவ்வாறானதாக காணப்படும் என்பது குறித்து நிச்சயமற்ற நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தவருடம் மேற்குலகிற்கு இரட்டை பேரிடர் ஏற்பட்டுள்ளது போல தோன்றுகின்றது என தெரிவித்துள்ள சுவீடனின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மேற்குலகமக்களை ஆபத்துக்களை எதிர்கொள்வதற்காக தங்களை தயார்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப் ரஸ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிற்கு பாராட்டுகளை தெரிவித்ததும்,நேட்டோ அமைப்பின் முக்கியத்துவம் குறித்து கேள்வி எழுப்பியதும்,ஜப்பானும் தென்கொரியாவும் தங்கள் அணுவாயுதங்களை தாங்களே தயாரித்துக்கொள்ள அனுமதிக்கவேண்டும் என தெரிவித்ததும் பலத்த சர்ச்சைகளை உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவர் பாரிஸில் உலக தலைவர்கள் செய்துகொண்ட காலநிலை மாற்றத்திற்கு எதிரான ஓப்பந்தத்தை இரத்துச்செய்யப்போவதாகவும்,ஈரா
இதேவேளை தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களை டிரம்ப் பின்பற்றுவாரா என்ற சந்தேகம் தங்கள் மத்தியில் உள்ளதாக மேற்குலக நாடுகள் தெரிவித்துள்ளன.
டிரம்ப் வெள்ளை மாளிகையில் நுழைந்து உலகின் அதிகவலிமைவாய்ந்த ஜனாதிபதியாக மாறியபின்னர் என்ன செய்வார் என்பது எங்களிற்கு தெரியாது என ஜேர்மனின் முக்கிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பூகோள அரசியல் ரீதியில் நாங்கள் நிச்சயமற்ற நிலையில் உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தெரிவுசெய்யப்பட்டதை தொடர்ந்து சர்வதேச அளவில் நிதிச்சந்தைகள் வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளை தேர்தல் முடிவுகள் மூலம் ஏற்படக்கூடிய தாக்கத்தை மதிப்பிடுவதற்காக அமெரிக்காவின் நேசநாடுகள் அவசர சந்திப்புகளிற்கு அழைப்பு விடுத்துள்ளன. அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியாக டிரம்ப் தெரிவுசெய்யபப்பட்மை வோசிங்டனின் அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன் சர்வதேச அளவில் அதிர்ச்சிகளை உருவாக்கியுள்ளது.டிரம்ப் எப்படி வெற்றிபெற்றார். எதிர்காலத்தில் அமெரிக்காவுடனான தங்கள்உறவுகளில் அவர் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப்போகின்றார் என்பதை அறிய முடியாமல் அமெரிக்காவின் நேசநாடுகள் தடுமாற்றமடைந்துள்ளன.தென்கொரிய தனது பாதுகாப்புச்சபையின் அவசரகூட்டத்திற்குஅழைப்பு விடுத்துள்ள அதேவேளை ஜப்பானின் நிதிநிபுணர்கள் தங்கள் பங்குசந்தையின் வீழ்ச்சி குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்,பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.மேற்குலகின் பல தலைவர்கள் பிரிட்டனின் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான வாக்கெடுப்புடன் இந்த தேர்தல் முடிவுகளை ஓப்பிட்டுள்ளனர்.பிரிட்டனில் இடம்பெற்ற தேர்தலிற்கு பின்னரும் இந்த தேர்தலிற்கு பின்னரும் உலகில் எதுவும் சாத்தியம்- எங்கள் கண்முன்னால் உலகம் சரிந்துவீழ்ந்துகொண்டிருக்கின்றது என அமெரிக்காவிற்கான பிரான்ஸ் தூதுவர் தெரிவித்துள்ளார்.




