அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய முன்னர் எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய முடியுமா? : ஜே.வி.பி கேள்வி
தற்பொழுது நடைமுறையில் உள்ள ஓய்வூதிய முறைக்குப் பதிலாக அரசாங்க சேவையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பங்களிப்புடான ஓய்வூதிய முறையொன்றை அமுல்படுத்த முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருடைய ஓய்வூதியமும் இரத்துச் செய்ய முடியுமா என ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்நெதி பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.
நேற்று வரவு-செலவுத்திட்டம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தின் முதலாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சுனில் ஹந்துன்நெத்தி எம்.பி. இந்தக் கேள்வியை எழுப்பினார்.
மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுப்பனவே வழங்கப்படுகிறது. எனினும், அதனை சம்பளமாக எடுத்துக்கொண்டு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் அரசாங்க சேவையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பங்களிப்புடான ஓய்வூதிய முறையொன்றைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கிறது. இவ்வாறான முறையைக் கொண்டுவருவதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருடைய ஓய்வூதியமும் இரத்துச் செய்யப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். -(3)




