செய்திகள்

மகிந்த மட்டுமே பொருத்தமானவர் 

மக்கள் கோரிய புதிய கட்சியின் தலைவர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மாத்திரமே தகுதியானவர் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
மக்கள் சார்பான புதிய கட்சியின் தலைவராக மக்களின் துயரங்கள், உணர்வுகள் மற்றும் வலிகளை அறிந்து கொண்டவரே தலைவராக நியமிக்கப்பட வேண்டும். இதனால், அந்தக் கட்சிக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே பொருத்தமானவர்.
தாமரை மொட்டு சின்னத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்ற புதிய கட்சியின் தலைவராக ஜீ.எல்.பீரிஸ் இருப்பதுடன் செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கானவர்கள் நியமிக்கப்படுவார்கள். கட்சியின் தலைவர்கள் மாநாட்டின் மூலம் தெரிவு செய்யப்படுவார்.
மக்கள் கோரிய புதிய கட்சியின் நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
புதிய கட்சிக்கான 10 இலட்சம் அங்கத்தவர்கள் மற்றும் 12 கிளைகளை ஏற்படுத்திய பின்னர், கட்சியின் மாநாடு நடத்தப்படும்.
எந்த பேதங்களும் இன்றி அனைவரும் புதிய கட்சியுடன் இணைந்துள்ளனர். புதிய கட்சியுடன் பல அரசியல் கட்சிகள் இணைந்து கொள்ளவுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட பிரதான அரசியல் கட்சிகளில் இருந்து பெரும்பாலானோரும் அரசியல்வாதிகளும் இணைந்து கொள்ளவுள்ளனர்.
புதிய கட்சிகள் ஆரம்பிக்கப்படும் போது பல்வேறு பிளவுகள் ஏற்படும். வரலாறு முழுவதும் அப்படி நடந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொடக்கமும் இப்படியான பிளவுதான்.
இதேவேளை மக்களின் ஜனநாயக உரிமையான சர்வஜன வாக்குரிமையையும் அரசாங்கம் இல்லாமல் செய்துள்ளது எனவும் பசில ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
n10