செய்திகள்
நள்ளிரவு முதல் தனியார் பஸ்கள் இயங்காது ?
வீதி ஒழுங்கு விதிகளை மீறும் வாகன சரதிகளுக்கு அறவிடும் ஆகக் குறைந்த தண்டப்பணத்தை 2500 ரூபாவாக அதிகரிக்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் சேவை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த போராட்டம் திட்டமிட்டப்படி நடக்குமெனவும் இதன்படி நாளைய தினம் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடாது எனவும் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன அறிவித்துள்ளார். -(3)




