வாகனத்தை பயன்படுத்தி விபாச்சார தொழிலில் ஈடுபட்ட மூவர் பம்பலப்பிட்டியில் கைது
நடமாடும் விபச்சார செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த மூன்று பெண்கள் கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வானொன்றை பயன்படுத்தி விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய பம்பலப்பிட்டி எமில்டா ஒழுங்கை பகுதியில் வானொன்றிலிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்களிடையே 23 , 27 மற்றும் 28 வயதுடைய பெண்களும் இருப்பதாகவும் இவர்கள் மின்னேரியா , குண்டசாலை மற்றும் உடவலவ பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். -(3)




